×

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது

மயிலாடுதுறை, ஜூன் 21: முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன்  மார்க்கெட், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க  பாஜகவினர் முயற்சித்தனர், மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம்  தலைமையில் எச்.ராஜா கலந்து கொள்ள இருப்பதாக பாஜகவினர் கூடினர். இதற்கிடையே  போலீசார், கருப்பு முருகானந்தம் மற்றும் மாவட்ட தலைவர் சிவாவை கைது  செய்ததுடன் உண்ணாவிரதம் இருக்க வந்தவர்களையும் கைது செய்தனர்.

இதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். மாநில விவசாய அணி கோவிசேதுராமன், மாவட்ட பொது செயலாளர்  நாஞ்சில்பாலு, நகர தலைவர் மோடிகண்ணன், செந்தில் மற்றும் பலர் பங்கேற்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் போலீசார்  அடைத்தனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...