×

நாகை அருகே ஓட்டல் அருகில் சுகாதார கேடு உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

நாகை, ஜூன் 21: நாகை தோணித்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் சுகாதார கேடாக இருப்பதாக உணவு பாதுகாப்பு மாநில ஆணையருக்கு புகார் வந்தது. இதையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஓட்டலின் உட்புறம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. ஓட்டல் அருகில் சாலையோரம் உள்ள சாக்கடை குப்பைகளால் அடைத்து கொண்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்று சுகாதார கேட்டை உருவாக்குவதாக இருந்தது.
இதுகுறித்து நாகை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டு சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஓட்டல் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...