×

பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி தரமில்லாமல் போடப்பட்ட தார்சாலை

பண்ருட்டி, ஜூன் 21: பண்ருட்டி கொரத்தி கிராமம் முதல் எனதிரிமங்கலம் வரை உள்ள தார் சாலைகள் பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த கரும்பு, நெல், சவுக்கு, மரவள்ளி, கொய்யா ஆகிய பொருட்களை விற்பனை செய்வதற்கு வாகனங்கள் மூலம் ஏற்றி செல்ல முடியவில்லை. பள்ளி மாணவ, மாணவிகளும் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலமாக 108 ஆம்புலன்சும் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல முடியவில்லை.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தார் சாலை போடும் பணி தொடங்கியது. சாலையை தரமாக போடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது கிராம மக்கள் தரமான சாலைகள் போடவேண்டும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுமார் அரை கிலோமீட்டர் மட்டும் தரமான சாலை போட்டனர். அதன் பிறகு சாலைகள் தரமானதாக இல்லை. இந்த சாலை ஒரு மழைக்கு கூட தாக்குபிடிக்காது என்று விவசாயிகள் கூறுகின்றனர். சாலை போடுவதில் முறைகேடு நடந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தரமான சாலை போடவும், முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது