×

அலேசீபம் கிராமத்தில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சூளகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அலேசீபம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 200 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்களை குறிக்கும் வகையிலும், மக்கள் கூடும் சந்தை அங்கிருந்ததும் கல்வெட்டில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. 7 அடி உயரம் மற்றும் 3 அடி அகலத்தில் உள்ள அந்த கல்வெட்டில் இறந்தவரின் பெயர், வயது, முகவரி செதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமுறையினர் தங்களுடைய மூதாதையர்களின் நினைவு நாளன்று, அந்த கல்வெட்டில் மாலை சாத்தி, குங்குமம் வைத்து வழிபடுகின்றனர். இதேபோன்று 10க்கும் மேற்பட்ட கல்வெட்டு உள்ளது. சில இடங்களில் அந்த கற்கள் காணாமல் போயுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு கல்வெட்டு மட்டுமே உள்ளது.

Tags :
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை