×

தேன்கனிக்கோட்டையில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 21: தேன்கனிக்கோட்டையில், அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் நாகேஷ் தலைமை வகித்தார். கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். தளி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜாகீர்உசேன், பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கிராமரெட்டி, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் ராமன், ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் பழனிசாமி, கெலமங்கலம் பேரூர் செயலாளர் திம்மராயப்பா, சிறுபான்மை பிரிவு தலைவர் சையத்அசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, தலைமை கழக பேச்சாளர் சபாபதி ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில் அமைச்சர் பேசுகையில், தளி தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தளி தொகுதியில் மலை பகுதி கிராமங்கள் அதிகமாக உள்ளதால் கூடுதல் பஸ், சாலை வசதி கேட்டுள்ளனர். அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தளி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்