×

சூளகிரி மேலுமலை பகுதியில் தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் பீதி

சூளகிரி, ஜூன் 21: சூளகிரி மேலுமலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் வாகன ஓட்டிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா மேலுமலையில் இருந்து கோபசந்திரம் வரையில் பெங்களூரு தேசிய நெஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் வாரத்தில் 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் உயிர்பலியும் உண்டாகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித பீதியுடனே செல்கின்றனர் தேசிய நெஞ்சாலையில் அதிவேகம், குடிபோதையில் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவது, ஒரு வழி பாதை என விதிகளை மீறி செல்வது போன்றவற்றால் விபத்து எற்பட்டு உயிர்பலி உண்டாகிறது.  

நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி மினிலாரி சென்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் மகன் விஜயன் (33) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். சூளகிரி அருகே கொள்ளபள்ளி அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியதில், மினிலாரி சேதமாகி விஜயன் சம்பவ இடத்திலே இறற்தார். சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகபட்சமாக அதிகாலை வேளையிலேயே இங்கு கோர விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றை தடுக்க போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்