×

ஐகோர்ட் கிளை நோட்டீஸ் ராமேஸ்வரம் ரத வீதிகளில் வாகனங்களை அனுமதிக்க வழக்கு

மதுரை, ஜூன் 21: ராமேஸ்வரம் ரதவீதிகளில் வாகனங்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி ரதவீதிகள் மக்கள் நலச் சங்க செயலாளர் தில்லை பாக்கியம், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரத வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள போலீசுக்கு அதிகாரம் இல்லை. அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

இதனால், வயதான முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் கோயிலுக்கு வர மிகுந்த சிரமப் படுகின்றனர். ஆனால், விஐபிக்கள் என்ற அடிப்படையில் பலர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். எனவே, ரதவீதிகளில் அனைத்து வாகனங்களும் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் மனு குறித்து ராமநாதபுரம் எஸ்பி, ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 27க்கு தள்ளி வைத்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை