×

பாதாள சாக்கடையில் உடைப்பு தேங்கிய கழிவுநீரால் நோய் ஆபத்து

ராமநாதபுரம், ஜூன் 21: ராமநாதபுரம் 2வது வார்டு தொன்னை குருசாமி தெருவில் பல மாதங்களாக பாதாள சாக்கடை ரோட்டில் ஒடுகிறது. இதனால் துர்நாற்றத்தால் வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. ரோட்டில் ஓடும் சாக்கடை அருகில் உள்ள காலி இடத்தின் வழியாக அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. வீட்டை விட்டு வெளியே வரும்போது சாக்கடையில் கால் வைக்காமல் வர முடியாத நிலை உள்ளது. இது சம்பந்தமாக நகராட்சி அலுவலகத்திற்கு பல முறை தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த சேகர் தெரிவித்ததாவது, ‘‘பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாகிறது. மக்கள் நடந்து செல்கின்ற பாதையில் கழிவுநீர் ஓடுவதால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. வீட்டு வாசல் வரை சாக்கடையாக உள்ளதால், குழந்தைகள் வெளியில் வர முடிவதில்லை.

இப்பகுதியை கடந்து செல்லும் யாரும் மூக்கில் கை வைக்காமல் செல்ல முடியாது. சாக்கடையால் உருவாகி வரும் கொசுக்கள் கடிப்பதால் குழந்தைகளுக்கு இருமல் சளி காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி வருகின்றது. நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை நேரில் போய் சொல்லியும் உடைப்பை சரி செய்ய வர மறுக்கிறார்கள். மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து நோய் வராமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை