×

அரசுப்பள்ளிக்கு பூட்டு வைகைக்கரை சாலையில் அழுகிய மாம்பழங்கள் குவிப்பு சுகாதாரக்கேடு பரவும் அபாயம்

மதுரை, ஜூன் 21: வைகைக்கரை சாலையில் அழுகிய மாம்பழங்களை குவித்து வைத்திருப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரையில் யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளில் பழக்கடைகள் அதிகமாக உள்ளன. மாம்பழ சீசனையொட்டி கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களையும் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இத்தகைய மாம்பழங்களை உடனடியாக விற்று விட வேண்டும். இல்லையெனில் சில நாட்களில் அவைகள் அழுகிவிடும். இந்நிலையில், வைகை தென்கரை சாலையில் அழுகிய மாம்பழங்களை குவித்து வைத்துள்ளனர்.
வைகை ஆற்றுக்குள் குப்பையை வீசக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் கம்பி வலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்புக்கு முன்னர் ரோட்டில் அழுகிய மாம்பழங்கங்களை குவித்துள்ளனர். இந்த மாம்பழங்கள் அழுகியுள்ள ஈக்கள் மொய்த்து வருகின்றன; துர்நாற்றமும் வீசுகிறது. மழை பெய்தால் இன்னும் துர்நாற்றம் அதிகரிப்பதுடன் சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே, அழுகல் மாம்பழங்களை குவிக்கவிடாமல், மாநகராட்சி தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...