×

யூனியன் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு ஆனி உற்சவ விழாவையொட்டி மீனாட்சியம்மன் கோயிலில் இன்று பாலாபிஷேகம்

மதுரை, ஜூன் 21: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி உற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனையொட்டி வரும் 27ம் தேதி வரை ஊஞ்சல் உற்வசம் நடைபெறுகிறது. இதற்காக கோயில், சாய ரட்சை பூஜைக்கு பின், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சென்று, சுவாமி சந்நதியில் உள்ள 100 கால் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சலாடுகின்றனர். அப்போது மாணிக்கவாசகரின் திருவாசத்தின் பொன்னூஞ்சல் பதிகத்தில் இருந்து 9 பாடல்களை ஒதுவாரால் பாடப்படும்.

ஆனி உத்தரத்தை முன்னிட்டு, இன்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் அம்மன், சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமியும் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். நாளை அதிகாலை 3 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனும் பிரதானமாகி, 100 கால் மண்டபத்தில் ஆனி உத்தர திருமஞ்சனம் பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு நடராஜர், சிவகாமியம்மாள் 4 மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். வரும் 28ம் தேதி உச்சிகால வேலையில், சொக்கநாதப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் பூஜை, அபிஷேகம் நடைபெறும்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை