×

கண்மாயில் மணல் திருட்டு

நாகமலை, ஜூன் 21: நாகமலைப்புதுக்கோட்டை அருகே, கண்மாயில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என போலீசில் புகார் செய்துள்ளனர்.
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகே, புதுக்குளம் பிட் 1 கிராமப் பகுதியில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பாசனம் மூலம் கிராம விவசாயிகள் நெல், வாழை கரும்பு உட்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இது தவிர குடிநீர் ஆதாரமாகவும் அந்த கண்மாய் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் டிப்பர் லாரி மூலம் கண்மாயில் மணல் அள்ளி கடத்துகின்றனர். அந்த ஊரில் உள்ள முக்கிய நபரின் உதவியோடு, மணல் திருட்டு நடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி வரதன் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக கண்மாய் பகுதியில் உள்ள மணலை, அந்த ஊரில் உள்ள ஒரு முக்கிய நபர் துணையோடு, டிப்பர் லாரி மூலம் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மணல் திருட்டை தடுக்க வேண்டும் என காவல்துறையில் பொதுப்பணித்துறை சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். இதுதவிர தாராப்பட்டி கீழமாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் மாட்டுவண்டிகள் மணல் திருட்டு நடக்கிறது. கிராமங்களில் மணல் அள்ளுவதற்கு உள்ளூர் அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்