×

₹380 தினக்கூலி கேட்டு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம் அவதானப்பட்டியில் திரண்டனர்

கிருஷ்ணகிரி, ஜூன் 20:  மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ₹380 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி அவதானப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். ஓசூர் நாராயணப்பா, கிருஷ்ணப்பா, கோவிந்த ஆர்ச்சாரி, மஞ்சு, தூர்வாசன், கிருஷ்ணகிரி சின்னசாமி, சாமுடி, குமார், மணிவேல், போச்சம்பள்ளி வெங்கடேஷ், திருவேங்கடம், முருகவேல், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக ₹380 வழங்கிட வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் பங்கேற்று, விளக்கி பேசினார். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க தலைவர் குணசேகரன், கிருஷ்ணகிரி கிளை தட்ட பொருளாளர் முனிசாமி, போச்சம்பள்ளி கோட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்