×

ஓசூர் அருகே வீடு புகுந்து கொள்ளை முயற்சி பெங்களூரு சகோதரர்கள் கைது வாகன சோதனையில் சிக்கினர்

ஓசூர், ஜூன் 20: ஓசூர் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பெங்களூரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹட்கோ பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (30). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிலர், வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த பிரபாகர் கூச்சலிட்டார். அந்த நேரம் 2 பேர், வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விசாரித்தார்.  மேலும், கண்காணிப்பு பணியும் முடுக்கி விடப்பட்டது.

தளி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். இதில், அவர்கள் பெங்களூரு புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த அர்ஜூன்(47) மற்றும் அவரது தம்பி ஹேமநாத்(30) என்பது தெரிய வந்தது. பிரபாகர் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு