×

ரயில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு

திருப்பரங்குன்றம், ஜூன் 20: திருப்பரங்குன்றத்தில் ரயில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மூலக்கரை ரயில்வே சுரங்கப்பாதையில் இருந்து ரயில் நிலையம் வரையிலான சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கான ரயில் தண்டவாள்ததில் ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் பத்து பேர் வரை ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். ரயில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா, மாநகராட்சி கமிஷனர் அனிஷ்சேகர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சுரங்கப்பாதை முதல் ரயில் நிலையம் வரையிலான பகுதிகளை ஆய்வு செய்தனர். இதில் விபத்தை தடுக்க சுரங்கப்பாதைக்கு முன்னராக பேருந்து நிறுத்தத்தை மாற்றுதல், வெயில் உகந்த அம்மன் பேருந்து நிறுத்தத்தை. நிரந்தரமாக அகற்றுதல் மற்றும் தண்டவாளத்தின்  இருபுறமும் மனிதர்கள் தண்டவாளத்தை கடக்காதவாறு தடுப்புகள் அமைத்தல்  போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை