×

மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி பஸ் உட்பட 8 வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து அதிகாரி அதிரடி பேரணாம்பட்டு அருகே அளவுக்கு அதிகமாக

பேரணாம்பட்டு, ஜூன் 20: பேரணாம்பட்டு அருகே அனுமதியின்றி மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி பஸ் உட்பட 8 வாகனங்களை ஆர்டிஓ நேற்று பறிமுதல் செய்தார்.பேரணாம்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார் நேற்று காலை சுற்றுப்புற பகுதிகளில் மப்டி உடையில் ஆட்டோவில் சென்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அனுமதியின்றி பள்ளி மாணவர்களை அதிகளவு ஏற்றிச்சென்றதை கண்டறிந்தார். இதையடுத்து மாணவர்களை ஏற்றிச்சென்ற 5 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தார்.

அதேபோல் மாணவர்களை ஏற்றிச்சென்றதாக ஆம்னி வேன் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தார். மேலும், பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத பஸ்சில் மாணவர்கள் ஏற்றி வந்ததை ஆய்வின்போது கண்டறிந்தார்.

இதையடுத்து அந்த பஸ்சை பறிமுதல் செய்தார். பின்னர் பள்ளிக்கு அந்த பஸ்சை அனுப்பி வைத்து மாணவர்களை இறக்கிவிட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு வரச்செய்தார். அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து மொத்தம் ₹50 ஆயிரம் அபராதம் விதித்தார். இதனை தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு டிரைவர்களின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்தார்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...