×

₹1.70 லட்சத்தை பறிகொடுத்த விவசாயி நெமிலி அருகே பட்டப்பகலில் துணிகரம் நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு.

அரக்கோணம், ஜூன் 20: நெமிலி அருகே பட்டப்பகலில் நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு விவசாயி ₹1.70 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சயனபுரம் ஊராட்சி பழைய கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(62), விவசாயி. இவரது தம்பி மகள் திருமணத்திற்காக பணம் தேவைப்பட்டது. இதற்காக இவர் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு நேற்று மதியம் 12 மணியளவில் நெமிலியில் உள்ள வங்கியில் அடகு வைத்து ₹1.70 லட்சத்தை பெற்றார். பின்னர் அந்த பணத்தை பையில் வைத்து பைக் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது, நெமிலி-சேந்தமங்கலம் சாலையில் உள்ள ஆற்றின் தரைப்பாலத்தில் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த வாலிபர், திடீரென அவரை உரசியபடி பக்கத்தில் வந்து நின்றார். 100 ரூபாய் கீழே விழுந்துள்ளது. அது உங்களுடையதா? எனக் கேட்டுவிட்டு பைக்கில் சென்று விட்டார். இதனால் ஜெயச்சந்திரன் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இருந்த ₹100ஐ எடுத்தார்.

அப்ேபாது, மற்றொரு வாலிபர் பைக்கில் வேகமாக வந்து ஜெயச்சந்திரன் பைக் கவரில் இருந்த ₹1.70 லட்சத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயச்சந்திரன் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த பைக் ஆசாமி வேகமாக தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து ெஜயச்சந்திரன் நெமிலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் ேபாலீசார் வழக்குப்பதிந்து பட்டப்பகலில் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்ற பைக் ஆசாமிகளை தேடிவருகின்றனர். மேலும் நெமிலி பகுதியில் பஜார் வீதியில் பொருத்தியுள்ள சிசி டிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்