×

நாகர்கோவில் மீனாட்சிபுரம் தனிஷ்க் ஜூவல்லரியில் வளையல் திருவிழா தொடக்கம்

நாகர்கோவில் மீனாட்சிபுரம்
தனிஷ்க் ஜூவல்லரியில்
வளையல் திருவிழா தொடக்கம்

நாகர்கோவில், ஜூன் 20: நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் அருகே தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமில் தற்ேபாது வளையல் திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. வரும் 30ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான நவீன டிசைன்கள் மற்றும் பாரம்பரிய டிசைன்கள் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த திருவிழாவை முன்னிட்டு செட்டிநாடு  அரண்மனை கட்டிடக்கலையை மையமாக கொண்டு லாவண்யம் கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கலெக்சன் வளையல், ஜிமிக்கி, பெண்டன்ட் செட், நெக்லஷ் செட் ஆகியவை கொண்ட  இந்த செட் 23 கிராம் முதல் தொடங்குகிறது. இதுகுறித்து கிளை பங்குதாரர் பாஸ்கர் சுப்பிரமணியம் கூறியதாவது:

 பொதுவாக ஒரு ெபண், அது தற்காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பில் அழகிய தங்க நகை வாங்கினால் அது தினசரி பயன்பாட்டிற்காகவும் இருக்கலாம்.  அல்லது முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அணிந்து கொள்வதற்காகவும் இருக்கலாம். இதனால் பலர் தங்களது நகைகளை மாற்றி வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நமது நாட்டில் முறைசாரா நகை விற்பனை சந்தை 90 சதவீதம் உள்ளது. இதனால் தரமற்ற, தூய்மையற்ற நகைகளை வாங்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் பலரும் 25 முதல் 30 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது பழைய நகைகளை கொடுத்து புதியதாக வாங்குகின்றனர். எனவே  இதனை கருத்தில் கொண்டு, மக்கள் நலன் கருதி தனிஷ்க் நிறுவனம் பல்வேறு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் வாங்கும் நகைகளுக்கு சான்றிதழ் தருவதுடன், அதனை திரும்ப  அன்றைய விலைக்கே பெறப்படுகிறது. அதாவது, நகைகள் வாங்கும், விற்பனை செய்யும் விலையும் ஒன்றே. நகைகளின் தூய்மையை சோதிக்க மின்னணு காரட் மீட்டர் உள்ளது. பழைய நகைகள் வாடிக்கையாளர் முன்னிலையில் உருக்கப்படுகின்றன. நகைகளில் உள்ள கற்களுக்கு தங்கத்திற்கான விலையை தரவேண்டியதில்லை.  மேலும் தங்க நகை வாங்கும்போது, ஒரு கேரட் கூடுதல் மதிப்பும், வைர நகை வாங்கும்போது 2 காரட் கூடுதல் மதிப்பும் தனிஷ்க் வழங்குகிறது. தேவைகளை கருத்தில்கொண்டு எண்ணற்ற டிசைன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. என்றார்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு