×

நித்திரவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 500 கி.ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை, ஜூன் 20: குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் டேவிட் ஆகியோர் நேற்று காலை நடைக்காவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களியக்காவிளை நோக்கி ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது.

சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவை சோதனையிட்டபோது அதில், 25 மற்றும் 20 கிலோ சாக்கு மூட்டைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளை கைப்பற்றி காப்புக்காடு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். ஆட்டோ கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.

சென்னையில் வழி தெரியாமல் தவித்த
கருங்கல் பகுதியை சேர்ந்த பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்த போலீஸ்
வாட்ஸ் அப் போட்டோ மூலம் முகவரி கண்டுபிடிப்பு
நாகர்கோவில், ஜூன்20: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள காக்கச்சி விளை பகுதியை சேர்ந்தவர் ரோசலின். இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் இவர் காலையில் வாக்கிங் சென்றார். நீண்ட தூரம் நடந்த ரோசலின் பாதை மாறினார். இதனால் மீண்டும் அவர் தனது மகள் வீட்டை கண்டுபிடித்து வர முடிய வில்லை. வழி தெரியாமல் தவித்த அவரை, அங்குள்ளவர்கள் மீட்டு புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  போலீஸ் விசாரணையின் போது சென்னையில் உள்ள  மகள் முகவரி தெரியாது என்றும், தனக்கு குமரி மாவட்டம் கருங்கல் அருகே காக்கச்சிவிளை என்றும் கூறினார்.

எனவே அவரது போட்டோவை, வாட்ஸ் அப் மூலம் குமரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து கருங்கல் காவல் நிலையத்துக்கு ரோசலின் போட்டோவை அனுப்பி விசாரணை நடத்துமாறு கூறினர். இதையடுத்து காக்கச்சிவிளை பகுதியில் விசாரணை நடத்திய போலீசார் ரோசலின் உறவினர்களை கண்டுபிடித்தனர். அவர்கள் மூலம் சென்னையில் உள்ள மகள் வீட்டு முகவரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது தாயாரை காணாமல் தேடி வந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் புழல் சென்று ரோசலினை மீட்டு வந்தனர். காவல்துறையினருக்கு ரோசலின் மற்றும் உறவினர்கள் நன்றி கூறிக்கொண்டனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி