×

வடசேரி பகுதியில் 450 கிலோ காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவில், ஜூன் 20 : குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு பொருட்களும், காலாவதி ஆன பொருட்களும், உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத உணவுகளும் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் நேற்று வர்த்தக நிறுவனங்கள் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 நாகர்கோவில் நகர பகுதியான வடசேரியில் நியமன அதிகாரி டாக்டர் கருணாகரன் தலைமையில் நாகர்கோவில் நகர பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கரநாராயணன், குமாரபாண்டியன் மற்றும் ஊழியர்கள் வர்த்தக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தேதி, தரம் குறைந்த பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மொத்தம்  450 கிலோ இருக்கும். பறிமுதல்செய்யப்பட்டஉணவுபொருட்களைவலம்புரிவிளைஉரக்கிடங்கில்கொட்டிஅழித்தனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...