×

பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

பெரம்பலூர்,ஜூன் 20: பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேரோட்ட திருவிழா நேற்று  கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 3ம் தேதி பூச்சொரிதலும், 12ம்தேதி அம்மனுக்கு காப்புக்கட்டுதலும் நடைபெற்றது. 15ம் தேதி நாகபாசம் வாகனத்திலும், 16ம் தேதி சிம்மவாகனத்திலும், 17ம்தேதி வானவேடிக்கை, மாவிளக்கு பூஜையுடன் ரிஷப வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 18ம்தேதி அம்மனுக்கு நேர்த்தி கடனாக தீமிதித்தல்
நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், சிறுவர்களும் என 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கோஷத்துடன் ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இதனைத்தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தேரோடும் விதிகளில் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இதில் பாளையம் மற்றும் குரும்பலூர், பெரம்பலூர், எசனை, அம்மாப்பாளையம், லாடபுரம், துறையூர், செட்டிக்குளம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று மஞ்சள்நீருடன் விழா நிறைவடைகிறது.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...