×

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 20: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கே ரத்ததானம் கொடுக்கப்பட்டது. நோயாளிகளுக்கு ரொட்டி, பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.  
அதன்பிறகு காமராஜர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கேக்வெட்டி கொண்டாடி அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில் நகர தலைவர் ராமானுஜம், சரத்சந்திரன், பத்மநாபன், கணேசன், மதியழகன், சிவாஜிசேகர், ராமகிருஷ்ணன், வேனுகோபால், கிரிஜா, ராஜேஸ்வரி, முத்தையாசெட்டியார், சுமதிஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...