×

கீழ்வேளூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் தெருமுனை பிரசார கூட்டம்3

கீழ்வேளூர், ஜூன் 20: நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம்  வல்லவிநாயககோட்டம், அய்யடிமங்கலம் ஆகிய இடங்களில்  திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.கூட்டங்களுக்கு  தலைமை செயற்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி கணேசன்,  75 அணக்குடி ஊராட்சி செயலாளர் அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், தலைமை கழக பேச்சாளர் பவானிகண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில்  மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜீவானந்தம்,  ஒன்றிய துணை செயலாளர்கள் பஞ்சுநாகராஜன், பாப்பிதண்டபாணி, சிவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...