×

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் மாற்றம் செய்யப்படும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

காரைக்கால், ஜூன் 20: புதுச்சேரியில் அடுத்த  சில மாதங்களில் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் சில மாற்றங்கள் செய்யப்படும். என, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.காரைக்கால் திருநள்ளாறு பகுதி சேத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், மாணவர்களுக்காக தயார்படுத்தப்பட்ட மதிய உணவுகளை அமைச்சர் சாப்பிட்டு, சுவை குறித்து பல்வேறு திருத்தங்களை செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.தொடர்ந்து, அமைச்சர் நிருபர்களிடம் கூறியது; சேத்தூர் அரசு பள்ளியில் மாணவர்கள் கல்வித்திறன் மேம்படவும், வரும் ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்யவும் ஆசிரியர்கள் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரீ பிரைமரி என்கிற பால்வாடி வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லை, உதவியாளர் இல்லை என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரிடம், அரசு பணி நியமனம் செய்யப்படும் வரை தற்காலிக முறையில் இவர்களை நியமித்து ஊதியம் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். பள்ளியில் சுற்றுச்சுவர் வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனார். நாட்டில் 7 மாநிலங்களில் பெங்களூருவை சேர்ந்த அட்சிய பாத்திரா என்கிற தன்னார்வ நிறுவனம், பள்ளியில் மதிய உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. புதுச்சேரியில் அடுத்த  சில மாதங்களில் மதிய உணவில் சில மாற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு நவீன சமையலறை தேவை என்பாதல் அதற்கான அமைப்பு புதுச்சேரியில் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு காரைக்காலில் இது நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, முதன்மை கல்வி அதிகாரி அல்லி, வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...