×

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 60 பேர் கைது

கடலூர், ஜூன் 18: கடலூர் மாவட்டத்தில் தவாக கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் டாஸ்மாக் மதுக்கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு பேருந்து மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தவாக கட்சியை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இதுபோன்று நகர, ஒன்றிய தவாக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று வன்னியர் சங்க தலைவர் குரு காலமானதை தொடர்ந்து பாமகவினர் கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட பாமகவினர் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு கட்சியிலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை தவாக, பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்