×

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு படத்திறப்பு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டியில் நடைபெற்ற குருவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் அஞ்சலி ெசலுத்தினர்.
ஜெயங்கொண்டம், ஜூன் 16: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் படத்திறப்பு விழா அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த வன்னியர் சங்க மாநில தலைவர் குரு,நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 25ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது படத்திறப்பு விழா காடுவெட்டியில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி மற்றும் சத்தியபாமா, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி ஆதிமூலம், முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சர்கள் வேலு, ஏ.கே.மூர்த்தி, மாநில துணை பொது செயலாளர் வைத்திலிங்கம், பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் கண்ணன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags :
× RELATED அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத...