×

அரியலூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி

அரியலூர், ஜூன் 16: அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே உலக ரத்த நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் பங்கேற்ற ரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த ேபரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:  அரியலூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டில் அதிக முறை ரத்த தானம் கொடுத்த  12 பேருக்கும், ரத்ததான முகாம் ஏற்பாடு செய்த 9 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது ரத்த தானத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை. ரத்ததானம் செய்வதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அரசு தலைமை மருத்துவர் ரமேஷ் மற்றும் திருமானூர்  வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் ரத்ததானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, அரியலூர் ஆர்டிஓ சத்தியநாராணயன், டாக்டர்கள் அறிவுசெல்வன், மோகன், தாசில்தார் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில்...