×

இலையூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பொது இசேவை மையம்

அரியலூர், ஜூன் 16: ஆண்டிமடம் அருகே இலையூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் இயங்கி வரும் பொது இசேவை மையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்  மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் திருச்சி கைத்தறி  பெருங்குழும திட்டத்தின்கீழ் ஆண்டிமடம் பகுதியில் செயல்பட்டு வரும் இலையூர்  கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பொது இசேவை மையம் கடந்த மாதம் 9ம்  தேதி இயங்கி வருகிறது. இந்த நெசவாளர் பொது இசேவை மையத்தின் மூலம்  பான்கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு திருத்தம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்று, “அ” பதிவேடு, பாஸ்போர்ட், ஜாதி சான்றிதழ் பெற  விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து வங்கிகளுக்கும் பண பரிமாற்றம், மின்  கட்டணம், தொலைபேசி கட்டணம், ரயில், விமானம் மற்றும் அரசு, தனியார் பஸ்  டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே  ஆண்டிமடம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை  பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...