×

ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்த அனிருத்

சென்னை: 4 ஆண்டுகளுக்கு பின் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இணைந்த பாடல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இசையமைப்பாளர் மற்றும் ஹீரோ ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது ‘வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

ஹிப்ஹாப் ஆதி ஜோடியாக ஆதிரா ராஜ் என்பவர் இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். ஏஆர்கே. சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இப்போது மீண்டும் இருவரும் இணைந்த இப்பாடல் உருவாகியுள்ளது.

Tags : Anirudh , Anirudh joined the roots of hip-hop
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்