×

குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பால் பிரதமரின் கல்வி தகுதி பற்றிய சந்தேகம் அதிகரித்துள்ளது: கெஜ்ரிவால் விளாசல்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை தர டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் கடந்த 2016ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் பிரதமர் கல்வித் தகுதி குறித்த தகவல்களை வழங்க உத்தரவிட்ட ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இது குறித்து கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவால் முழு நாடும் திகைத்து நிற்கிறது. ஏனெனில் ஜனநாயகத்தில் தகவல்களை தேடுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பிரதமரின் கல்வித்தகுதி மீதான சந்தேகத்தை இன்னும் அதிகரித்துள்ளது. ஒன்று, மோடியின் ஆணவம் அல்லது அவரது பட்டம் போலியானதாக இருக்க வேண்டும்.  நாட்டின் தலைமை பொறுப்பை வகிப்பவர், ஒவ்வொரு நாளும் அறிவியல் மற்றும் பொருளாதாரம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர் படிப்பறிவில்லாதவராக இருந்தால், அதிகாரிகளும், மற்றவர்களும், மக்களை வாட்டி வதைக்கக் கூடிய பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக அவருடைய கையெழுத்தை எளிதாக பெற்றுவிடுவார்கள். கடைசியில் மக்கள் தான் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். பிரதமர் மோடி படித்தவராக இருந்தால், நிச்சயம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியிருக்க மாட்டார். இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.


Tags : Gujarat High Court ,PM ,Kejriwal Vlasal , Gujarat High Court verdict raises doubts about PM's educational qualification: Kejriwal Vlasal
× RELATED பிரதமர் பதவியில் இருந்து கொண்டு...