×

இ-சேவை, மக்கள் சேவை மையத்தில் 100 புதிய சேவைகள் அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிவிப்பு:

* சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்-இல் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்கா ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்.  

* எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பசுமை தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தரத்தில் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* அசைவூட்டப் படம், காட்சி வெளிப்பாடு, வேடிக்கையான விளையாட்டு மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும்.

* இடைமுக பயன்பாட்டு நிரலி நுழைவாயில் மூலம் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை உயர்ந்த தரத்துடன் விரைவாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* தமிழ்நாடு நலத்திட்ட பயனாளிகளுக்கான நேரடி பயன் பரிமாற்ற தளம் உருவாக்கப்படும். பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் தாங்கள் பெற்ற பயன்களை இணையதள, கைப்பேசி செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

* தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவுத்தளம் ரூ.11 கோடி செலவில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் வருவாய் பங்கீட்டிலிருந்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

* தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும்.

* 100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் ரூ.120 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.

* மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூ.184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

* மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், நம்பகமான அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவினத்தில், அரசு பொது சந்தை நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

* தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். திருநெல்வேலி, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய இடங்கள் இதற்காக கண்டறியப்பட்டு ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

* ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கும் நோக்கில் துறைகளுக்கான சீர்மிகு மையம் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.

* இணைய பாதுகாப்பு 2.0 மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் கொள்கை புதுப்பிக்கப்படும்.


Tags : People's Service Center ,Minister ,Mano Thangaraj , E-Service, 100 new services at People's Service Center High-speed internet connectivity for government offices: Minister Mano Thangaraj announced
× RELATED மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு...