×

எழுதி வைத்து படிக்காமல் குறிப்பு எடுத்து பேசுங்கள்: எம்எல்ஏக்களுக்கு பேரவை தலைவர் அறிவுரை

பேரவையில் நேற்று பாலக்கோடு அன்பழகன் (அதிமுக) பேசும்போது, காகிதத்தில் எழுதி வைத்திருந்ததை பார்த்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேசியதாவது: 1996ம் ஆண்டு சபாநாயகராக பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இருந்தார். அவர், உறுப்பினர்கள் காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்து பேசக்கூடாது என்பார். புள்ளி விவரங்களை வேண்டும் என்றால் காகிதத்தில் குறிப்பு எழுதிக்கொண்டு வரலாம் என்பார். அதனால் உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பு வைத்து பேச முயற்சி செய்ய வேண்டும். அவை முன்னவர் துரைமுருகன்: உறுப்பினர்கள் எழுதிக் கொண்டு வந்து அப்படியே படிக்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. இப்போது எல்லோருமே அப்படித்தான் படிக்கிறார்கள்.

சபாநாயகர் அப்பாவு: உறுப்பினர்களை முயற்சி செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: பேரவையில் பேசும்போது புள்ளி விவரங்கள் தவறாக சொல்லி விடக்கூடாது என்பதற்காக, குறிப்பு எடுத்துக்கொண்டு வந்து பேசுகிறார்கள். இது பரீட்சை கிடையாது. மக்கள் பிரச்னை. எனவே, பேசவிடுங்கள். சபாநாயகர் அப்பாவு: நான் தவறாக சொல்லவில்லை. 4 பக்கத்தை எழுதி, படித்துவிட்டு வந்து அதை 2 வரியில் சொல்லுங்கள் என்கிறேன்.

Tags : president ,MLA , Don't read and write, take notes and speak: Speaker's advice to MLAs
× RELATED நாடாளுமன்றத்தில் முஸ்லிம்...