×

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. மார்ச் 6-ல் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம் என்று தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,G.K. Stalin , Vaikam protest, India, Prime Minister M. K. Stalin
× RELATED பிறந்தநாள் வாழ்த்து கூறிய...