×

ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 180 மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர். சிகராமகானப்பள்ளி கிராமத்தில் இருந்து தோட்டக்கணவாய் கிராமத்திற்க்கு ரேசன் பொருட்களை வாங்க கிராம மக்கள் தினமும் சுமார் 2 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். அப்போது, கிராமத்தின் குறுக்கே உள்ள திம்மம்மா ஆற்றை ஆபத்தான முறையில் பெண்கள் முதல் முதியோர்களை வரை இடுப்பளவு ஆற்று நீரில் தலையில் அரிசி மூட்டைகள், சக்கரை, எண்ணெய் பைகளுடன் ஆபத்தான முறையில் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு சுமந்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இடுப்பளவு தண்ணீரில் ரேஷன் பொருள்களை தலைமீது சுமந்து கொண்டு பல பேர் ஆற்றை கடந்து வரும் போது ஆற்றில் தவறி விழுந்து அரிசி, சக்கரை தண்ணீரில் முழ்கி வீணாகியுள்ளது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்கும் போது வேப்பனப்பள்ளி வழியாக வந்து சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி கொண்டு கிராம மக்கள் நடந்து சென்றும், வண்டிகளிலும் ஆட்டோக்களிலும் சென்று ரேசன் பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் குறையும் போது இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கடந்து ஆற்றில் கடந்து சென்று பொருள்களை வாங்கி வரும்போது பலருடைய ரேசன் அட்டைகள் காணாமல் போனதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறனர்.

ரேசன் பொருட்களளை வாங்க தள்ளாடும் முதியவர்கள் முதல் சிறுவர்கள், பெண்கள் வரை ஆற்றில் இறங்கி அவதிப்பட்டு ரேஷன் பொருட்களை வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 180க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பலமுறை தங்களது கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டுமென பல அதிகாரிகளுக்கும் மனுக்களையும் கோரிக்கைகளையும் வழங்கியும் அதிகாரிகள் செவி சாய்கமால், கண்டு கொள்ளமால் அதிகாரிகள்  உள்ளதாக கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் இந்த கிராமத்திற்க்கு  உடனடியாக புதிய பகுதி நேர ரேசன் கடை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Villagers walk 2 kilometers daily in waist-deep water to buy ration items
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...