×

ஒழையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் : எம்எல்ஏ திறந்து வைத்தார்

உத்திரமேரூர்: ஒழையூர் கிராமத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார்ஓடை கிளை செயலாளர் பாபு அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தினை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 2000 ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், ஊராட்சி தலைவர் முனுசாமி, விஷ்ணு, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பொற்பந்தல், அன்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்படவும் விவசாயிகள் சுதந்திரமாக தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய வசதியாக விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய உழவர் உற்பத்தியாளர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவில், அப்பகுதியை சேர்ந்த 13 விவசாயிகளும் வெள்ளபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவினர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.

இதன் மூலமாக விவசாயிகள் உரிய கால அவகாசத்தில் தங்களின் நெல்லை விற்பனை செய்ய முடியும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறினர். இந்த கொள்முதல் நிலையம்  மூலமாக வெள்ளபுத்தூர், கரிக்கிலி, பாப்பநல்லூர், சித்தாமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. மேலும், உழவர் உற்பத்தியாளர் குழுவின் மேற்பார்வையில் நடைபெறும். இந்த நெல் கொள்முதல் நிலையத்தின் மீது நம்பிக்கை வைத்து பல கிராம விவசாயிகளும் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Paddy purchase station ,Owayur village ,MLA , Paddy purchase station in Owayur village: MLA inaugurated
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...