தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மே 26:  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சுதேசி மில் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன அமைப்பாளர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், பரசுராமன், சாரங்கபாணி, ராமநாதன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். பெருமாள், அசோகன், செந்தில்நாதன், சக்திவேல், வேலு, அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மக்களை கொல்லும் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு காரணமான தூத்துக்குடி கலெக்டர், எஸ்பி மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த அரசியல் கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு