பைக்கில் மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

காலாப்பட்டு, மே 26: கோட்டக்குப்பம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையிலான போலீசார் காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டு ேபருந்து நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்புத்துப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது புதுச்சேரி காலாப்பட்டில் இருந்து மரக்காணம் நோக்கி பைக்கில் வேகமாக வந்த 2 வாலிபர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

2 பேரையும் சோதனை செய்தபோது பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இருவரையும் கோட்டக்குப்பம் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், மரக்காணம் அடுத்த கழிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (43), விமல்ராஜ் (25) என்பது தெரியவந்தது. 2 பைக்குகளிலும் 120 மதுபாட்டில்கள், 10 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு