×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.43 லட்சத்தில் நாப்கின் இயந்திரங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.43 லட்சத்தில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் உயர்கல்வி மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

* அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில், புதிதாக தொடங்கப்பட்ட பாட பிரிவுகளுக்கு தேவையான ரூ.10 கோடியில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.43 லட்சம் மதிப்பில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி இயந்திரங்களும் வழங்கப்படும்.

* அரசு கல்லூரிகளில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.180 கோடியில், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

* கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிகளில் ரூ.108 கோடி மதிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

* திருவொற்றியூர், செஞ்சி, வடலூர், ஸ்ரீபெரும்புதூர், நாட்றாம்பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.68.55 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகளுக்காக, 250 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும்.

 * அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள சில பாடப்பிரிவுகளை நீக்கி புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* 3 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயிலும் பொழுதே வருமானம் ஈட்டும் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.




Tags : Minister ,Ponmudi , Napkin machines to be provided at Rs 43 lakh in government arts and science colleges: Minister Ponmudi announced
× RELATED சட்ட நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு அமைச்சர் பொன்முடி நன்றி