×

தமிழ்நாட்டில் பிரபலமான 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் ஏற்கனவே  45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டது‌. 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் சட்டப்படி புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படும். இதுகுறித்து அரசு முறையான அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu , Geocode for 11 popular items in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...