×

கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் 4வது நாளாக ஸ்டிரைக் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

நாகை, மே 26: கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் நேற்று 4வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி அஞ்சல் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கமலேஷ் சந்திர கமிட்டியின் பரிந்துரைகளை ஒப்பந்த ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று 4வது நாளாக காலை அஞ்சல் மூன்று கோட்ட செயலாளர் விஜயராகவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டி இருந்தனர். போராட்டத்தை அகில இந்திய மீனவர் சங்க ஆலோசகர் கீச்சாம்குப்பம் ராஜேந்திரன் நாட்டார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். செயலாளர்கள் இளங்கோவன், சட்டநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராமிய அஞ்சல் ஊழியர் முருகானந்தம் நன்றி கூறினார். மாவட்டத்தில், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு தலைமை தபால் நிலையம், 29 துணை தபால் நிலையங்கள், 86 கிளை தபால் நிலையங்கள் ஆகியவற்றை சேர்ந்த 400 பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அஞ்சல் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்