×

3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 16 பேர் கைது

மயிலாடுதுறை, மே 26:  மயிலாடுதுறை அருகே தலைஞாயிறில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  3ம் நாளாக நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை விலக்கிக்கொள்ள கேட்டுக்கொண்டார்.

தங்களது சம்பளத்தையாவது அளிக்கவேண்டும் என்றும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த இயலாமல் பள்ளியில் சேர்க்க இயலவில்லை என்று கூறியதற்கு அதிகாரி  சம்பளத்தை பெற்றுத்தர உத்தரவாதம் அளிக்கவில்லை. அதனால்  தங்களது உள்ளிருப்புப்போராட்டத்தை தொடர்ந்தனர்.  நேற்று மதியம் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. உடனடியாக மணல்மேடு போலீசார் ஆலைக்குள் புகுந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஏஐடியூசி தலைவர் கமலநாதன் தலைமையில் ஒரு பெண் உட்பட 16 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...