×

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து அரசு பணியாளர் சங்கம், ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

நாகை, மே 26: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 14 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட அரசு பணியாளர் சங்கம் சார்பில் நேற்று நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தாசில்தார், துணை தாசில்தார் பணியாளர் சங்க மாநில தலைவர் குமார், அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார். ஜாக்டோ ஜியோ சார்பில் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன் நடந்த கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், ரவி, சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் பார்த்தசாரதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் சித்ரா, குத்தாலம் வட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் ராமச்சந்திரன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன், போக்குவரத்து ஊழியர் சம்மேளன மண்டல செயலாளர் ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் ஆகியோர் பேசினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர மன்ற பொது செயலாளரும், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான மீனாட்சிசுந்தரம் நிறைவுரையாற்றினார்.அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குருபிரசாத் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்