×

நாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

நாகை, மே 26: மதுராந்தகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாகை தாசில்தார் அலுவலகம் எதிரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். போராட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை தீவைத்து கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நகர செயலாளர் போலீஸ் பன்னீர், வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிமுத்து, நெசவாளர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மீனவரணி அமைப்பாளர் சேகர், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் முருகாந்தம், மாணவரணி துணை அமைப்பாளர்கள் எலக்ட்ரிகல் பாலா, பாரி, விவசாய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை துணை அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயேந்திரன், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் சத்யன், நகர அவைத்தலைவர் வீராசாமி, நகர துணை செயலாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் திமுக கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. பேரூர் பொறுப்பாளர் மரியசார்லஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி  முன்பாக திமுக   நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ்  தலைமையில் அவைத்தலைவர் குமார், தெய்வநாயகம், மாரியப்பன், ஆனந்த் மற்றும்  நாகப்பன் உட்பட கட்சியின் பொறுப்பாளர்கள் 20க்கும்மேற்பட்டோர் மு.க. ஸ்டாலின் கைதைக் கண்டித்தும், எடப்பாடி அரசு உடினயாக ராஜினாமா செய்யவேண்டும் என்ற  முழக்கங்களை எழுப்பினர்.  மயிலாடுதுறை போலீசார்  போலீசார் அனைவரையும்  கைது செய்து தனியார் பள்ளி ஒன்றில் அடைத்தனர். இதேபோல திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் வழக்கறிஞர் உள்பட 20 பேர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சீர்காழி:  சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிகுமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன் முன்னிலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 65க்கும் மேற்பட்டவர்களை சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் கைது செய்தனர். தரங்கம்பாடி: செம்பனார்கோவிலில் சாலை மறியல் போராட்டம் ஒன்றிய பொருளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாவட்ட பிரதிநிதிகள் நத்தம் வின்சென்ட், தென்னரசு, ஒன்றிய துணை செயலாளர் சத்தியராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம்: வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே திமுக நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ காமராஜ், திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கர்ணன் முன்னிலையில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட கட்சியினர் 40 பேரை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...