×

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்..!!

சென்னை: ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. நிறுவன இயக்குநர்களான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கஜலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மோசடி வழக்கில் ஹிஜாவு நிறுவன தலைவர் சவுந்திரராஜன் உட்பட 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.25 லட்சம் மதிப்பு தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.14 கோடி வங்கி கணக்கு, ரூ.45 கோடி சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளது.

Tags : Hijau , Hijau Corporate Fraud, Arrest, Economic Offenses Division Police
× RELATED ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய...