காவல்காரரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

நெட்டப்பாக்கம், மே 25:   நெட்டப்பாக்கம் அடுத்துள்ள பண்டசோழநல்லூர் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் ராமு (45). பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் நிலத்தில் காவல் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று லோகநானின் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச ராமு காத்திருந்தார்.
அங்கு வந்த பண்டசோழ நல்லூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (39) ராமுவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.   லேசான காயங்களுடன் இருந்த ராமு சிகிச்சை பெற்று நெட்டப்பாக்கம் போலீசில் ஐயப்பன் மீது புகார் அளித்துள்ளார். நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள ஐயப்பனை தேடி வருகின்றனர்.

× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு