×

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை மற்றும் வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா என்பவருடைய 3 வயது கன்று குட்டி அப்பகுதியில் நேற்று மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை தாக்கி கொன்று இறைச்சியை சாப்பிட்டு சென்றது.

கன்றுக்குட்டி வீட்டிற்கு வராததால் அதை தேடி வனபகுதிக்கு சென்ற அதன் உரிமையாளர் கன்றின் உடலின் பாகங்கள் அங்கு கிடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.  வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் கன்று குட்டியை சிறுத்தை வேட்டியாடி சென்றது தெரிய வந்தது.

Tags : Calf , Calf killed by leopard attack
× RELATED 2 கன்று ஈன்ற நாட்டு மாடு