கல்லூரி மாணவியின் கை,கால்களை கட்டி அடித்து கொன்று சாக்கு மூட்டையில் வீச்சு

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொங்கர்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் 75 அடி ஆழ விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை நேற்று பங்களாபுதூர் போலீசார் மீட்டனர். விசாரணையில் அந்த இளம்பெண் கோபி அருகே நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்த குமார் மகள் ஸ்வேதா (21), கரட்டடிபாளையத்தில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்துள்ளார். கடந்த 28ம் தேதி கல்லூரி செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது பற்றி தாய் மஞ்சுளாதேவி அளித்த புகாரின்படி கோபி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில்தான் கல்லூரியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள விவசாய கிணற்றில்தான் ஸ்வேதா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பதும், பின்னரே சடலம் கிணற்றில் வீசப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. கொலையாளி யார், காரணம் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: