×

ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது இந்திய ஹஜ் குழு

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கமாகும்.  இந்த ஆண்டு ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை (சுற்றறிக்கை எண்.6)
www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தெரிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்.6-ல் தெரிந்து கொள்ளலாம்.

* ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு ஊழியர்கள் மட்டும் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

* ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்க 13.04.2023-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags : Hajj Board of India ,Hajj Volunteers , Hajj Board of India has issued circular for selection of Hajj Volunteers
× RELATED ஹஜ் தொண்டர்கள் தேர்வுக்கு 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்