×

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருமாலின் அவதாரங்களில் முக்கியமானது ஸ்ரீ ராம அவதாரம். ஏனெனில் இறைவன் மகாவிஷ்ணு, மண்ணில் மனிதராக அவதரித்து, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய அவதாரம் தான் ராம அவதாரம். அவரிடம் இல்லாத குணங்களே இல்லை எனலாம். பாசம், பக்தி, வீரம், அறம், சகோதரத்துவம் போன்ற எல்லா குணங்களும் கொண்ட ராமன் அவதரித்த தினத்தை ஸ்ரீ ராமநவமி என்கிறார்கள். இந்த நாளில் ராம பக்தர்கள் அகமகிழுவார்கள். காலையில் எழுந்து விரதம் இருப்பார்கள். நாளை ஆலயங்களில் ராமருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

கிருஷ்ணர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலையை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்வார்கள். இந்த ஊர்வலம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

ராமரின் பெருமைகளை போற்றி, அவரின் அருளை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் ராம நவமி ஆகும். இராம என்றால் இரவு என்றும், மன் என்றால் தலைவன் என்றும் பொருள். ராமன் என்ற சொல்லுக்கு இரவின் தலைவன். ராமன் என்ற சொல்லுக்கு குளிர்ந்த முகத்துடன் அருள் செய்பவன் என்று பொருள்.

ராமநவமி நாளான நாளை ராமனின் ரத யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாரத் இந்து முன்னணி அமைப்பு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஊர்வலம் நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காவல்துறை தரப்பு பதிலை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்நிலையில் சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாரத் இந்து முன்னணி அமைப்பின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜார்ஜ் டவுனில் இருந்து பட்டாளம் வரை ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.



Tags : High Court ,Ram Navami ,Chennai , Chennai, tomorrow, Ramnavami procession, alternate route, High Court, order
× RELATED தமிழகம் வரும் ராம நவமி யாத்திரை குழு...