×

ஏப்ரல் முதல் வலி நிவாரணிகள், ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% உயர்கிறது.!!

டெல்லி: அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்கிறது. வலி நிவாரணி, ஆன்ட்டிபயாடிக்ஸ், இதய நோய் மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12% அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டின் மொத்த விலை பண வீக்கத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையை மாற்றி அமைத்து கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 27 சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகள் கொண்ட 900 மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12% அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தேசிய அத்தியாவச மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் அடங்கும். ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலையும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் ஏழை, எளிய மற்றும் மூத்த குடிமக்கள் தங்களது மாத பட்ஜெட்டில் மருந்துகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 


Tags : April, essential, drug, price, rises
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...