×

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்!: அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி.. ஈபிஎஸ் பேட்டி..!!

சென்னை: பொதுச்செயலாளராக என்னை அதிமுக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வெற்றி  சான்றிதழ் பெற்று கொண்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அதிமுக தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவை அறிவித்து விட்டார்கள். அந்த தருணத்தில் இருந்து நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்:

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் அறிவித்தனர். ஈபிஎஸ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி:

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக ஈபிஎஸ் பொறுப்பேற்றார்.

அதிமுக பொதுச்செயலாளர்களின் வரலாறு:

1972ல் அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் கட்சியின் முதல் பொதுச்செயலாளராக இருந்தார். நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்துள்ளனர். 1989ம் ஆண்டில் பொதுச்செயலாளராக தேர்வான ஜெயலலிதா 2016ல் மறையும் வரை பதவியில் நீடித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருந்தார். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்தனர்.


Tags : MGR ,Jayalalitha ,AIADMK ,General Secretary ,EPS , AIADMK General Secretary, Administrators, Thanks, EPS interview
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...